shadow

sanjitha shettyசூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதியின் கனவு நாயகியாக வந்து கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சஞ்சிதா ஷெட்டி, தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் அருண்குமார் சாமி இயக்கவுள்ள ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள சஞ்சிதா ஷெட்டிக்கு இந்த படத்தில் கவர்ச்சியுடன் நடிக்கக்கூடிய ஒரு கேரக்டர் என கூறப்படுகிறது.

இதுதவிர கன்னடத்தில் பேட்மேஷ் என்ற படத்திலும் சஞ்சிதா ஷெட்டி, தனஞ்சய் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள இன்னொரு படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கன்னடத்தில் அறிமுகமானாலும் தமிழில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும், தமிழில் நம்பர் 1 நடிகை என்ற பெயர் எடுப்பதே தனது லட்சியம் என்றும் சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றது.

Leave a Reply