சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருது
sania
ITF எனப்படும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் டென்னிஸ் விளையாட்டில் சாதனை செய்யும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருது வழங்கி வரும் நிலையில் இவ்வருடத்திற்காக சாம்பியன் விருது பெறும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் சிறந்த வீரராக செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை 5வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பெண்கள் ஒற்றையர் உலக சாம்பியன் விருதை அமெரிக்காவின் நம்பர் ஒன் டென்னிஸ்  நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் அவர்களுக்கு கிடைத்துள்ளது.  இவர் இந்த விருதை 6வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக சாம்பியன் விருதை பெறும் பெண்கள் இரட்டையரகளாக இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்முறையாக இந்த விருதை பெறும் சானியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஐ.டி.எப்.-யிடம் இருந்து பெறும் இந்த விருது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நானும், ஹிங்கிசும் கைகோர்த்த குறுகிய காலத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு சாதனைகளை (9 பட்டம்) படைத்துள்ளோம். எனது வாழ்க்கையில் உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றிகள், இந்தியாவில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஐ.டி.எப். உலக சாம்பியன் விருதுகள், பாரீசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் போது அளிக்கப்படும்.

English Summary: Sania-Martina team named 2015 ITF World Champions

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *