shadow

11உலகிலேயே மிக அதிகமான ஸ்டோரேஜ் திறன் கொண்ட மெமரி கார்டு ஒன்றை அல்ட்ரா சாண்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 128 ஜி.பி அளவு கொண்ட இந்த புதிய மெமரி கார்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் மாநாட்டில் அறிமுகம் ஆனது. சாதாரண மெமரி கார்டை விட இரண்டு மடங்கு வேகத்திறன் உள்ள இந்த மெமரி கார்டுகளை மொபைல்போன்கள், கேமராக்கள், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

இந்த மெமரி கார்டில் , 16 மணி நேரம் HD. வீடியோ, 7,500 பாடல்கள், 3,200 போட்டோக்கள், 125-க்கும் மேற்பட்ட APPSகளையும் சேமித்து வைக்க முடியும். மெமரி வசதி குறைவாக உள்ள டேப்லட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த மெமரி கார்டின் வரவு வரப்பிரசாதமாக இருக்கும் என டிஜிட்டல் மார்க்கெட்டிங் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்தியாவில் மிகவிரைவில் இந்த மெமரி கார்டு விற்பனைக்கு வரவுள்ளதாக  ‘சான்டிஸ்க்’ நிறுவனத்தின் இந்திய மேலாளர் ராஜேஸ் குப்தா தெரிவித்தார்.

Leave a Reply