shadow

sandamaruthamசரத்குமார் நடிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள திரைப்படம் சண்டமாருதம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சர்வேஷ்வர்’ என்ற பெயரில் தமிழில் ரிலீஸாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சரத்குமார் இருவேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா மற்றும் மீரா நந்தன் நடிக்கின்றனர். ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் கடந்த டிசம்பர் மாதமே வெளிவந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சரத்குமாரே கதை எழுதியுள்ளார். பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை வி.டி.விஜயன் எடிட்டிங் செய்துள்ளார்.

சரத்குமாரும் இயக்குனர் வெங்கடேஷும் இணையும் 4வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஏய், மகாபிரபு, சாணக்யா ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply