shadow

‘தொண்டனுக்காக விநியோகிஸ்தராக மாறிய சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்துள்ள தொண்டன் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் மே 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று அல்லது நாளை வெளிவரலாம்

இந்த நிலையில் சமுத்திரக்கனியின் முந்தைய படமான ‘அப்பா’ நல்ல வசூலை கொடுத்த நிலையில் ‘தொண்டன்’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற விநியோகிஸ்தர்கள் போட்டி போட்டு வருவதாக கூறபடுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை பார்த்து சமுத்திரக்கனியே சேலம் ஏரியாவில் சொந்தமாக ரிலீஸ் செய்யவுள்ளார்.

சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply