shadow

smartj_2347861f

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தத் தகவலைப் புள்ளிவிவரங்களுக்கான ஸ்டாஸ்டா இணையதளம் தெரிவித்துள்ளது. 2014- ம் ஆண்டியில் சாம்சங் 12 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்துள்ளது. இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் நிறுவனம் கிக்ஸ்டாட்ர்ட்டர் செல்லப் பிள்ளையான பெப்பில். ஏழு லட்சம் வாட்ச்களை பெப்பில் விற்பனை செய்துள்ளது. ஃபிட்பிட் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சோனி, லெனோனோ, எல்ஜி. போன்றவை வரிசையாக அடுத்த இடங்களில் உள்ளன.

மொத்தமாக கடந்த ஆண்டு 68 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனையாகியுள்ளன. ஸ்மார்ட் வாட்சின் சராசரி விலை 189 டாலர் ( ரூ.11,800). அடுத்த மாதம் இறுதியில் ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆகும் போது இந்த நிலை மாறக்கூடும். இதனிடையே சீன சந்தையில் இப்போதே ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் போன்ற தோற்றம் கொண்ட போலி ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. வடிவமைப்பில் ஆப்பிள் வாட்ச் போலவே தோற்றம் கொண்ட இவை ஆண்ட்ராய்டில் இயங்குகின்றன. 35 டாலரில் இருந்து கிடைக்கும் இந்தப் போலி வாட்ச்கள் மின்வணிக தளங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் வாட்ச் ஏப்ரல் 24 முதல் விற்பனைக்கு வருகிறது. ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகலாம்.

Leave a Reply