shadow

14

சாம்சங் நிறுவன நிர்வாகி லீ குன் ஹீ இன்னும் 6 வாரங்களில் காசியாபாத் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் தவறினால் அவருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ரூ.84 லட்சம் மோசடி செய்ததாக சாம்சங் நிறுவன நிர்வாகி லீ குன் ஹீ மீது காசியாபாத் நீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லீ குன் ஹீக்கு அவர் நேரில் ஆஜராகாததால், அவருக்கு சமீபத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. பிடிவாரண்டை எதிர்த்து அவர் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவருடைய மனுவை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், லீ குன் ஹீயை குற்றவாளியாக அறிவித்து, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பு அளித்தது.

அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் லீ குன் ஹீ மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்ரு விசாரணை நடத்திய நீதிபதிகள் சந்திரமவுலி குமார் பிரசாத் மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர்  ”லீ குன் ஹீயின் கோரிக்கையை ஏற்க இயலாது என்றும் அவர் இன்னும் 6 வாரங்களுக்குள் காசியாபாத் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும், அவ்வாறு சரண் அடையவில்லை என்றால் அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்படும்” என அதிரடியாக உத்தரவிட்டனர்.

Leave a Reply