அஜித்துக்கே கிடைக்காதது சிவகார்த்திகேயனுக்கு கிடைச்சிருச்சே!!

action-hero-Sivakarthikeyanதென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையான சமந்தா கோலிவுட் திரையுலகில் விஜய்யுடன் ‘கத்தி’ மற்றும் ‘தெறி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தபோதிலும் இன்னும் அஜித்துடன் ஒரு படத்தில்கூட அவர் நடிக்கவில்லை

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இந்த தகவலை படத்தயாரிப்பாளர் 24 ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே ஹன்சிகா, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, கீர்த்திசுரேஷ் போன்ற முன்னணி நடிகைகள் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் சமந்தாவ்ம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *