தனுஷ்-விக்ரம்குமாருடன் மூன்றாவது முறையாக இணையும் சமந்தா
samantha
தனுஷூடன் நடிகை சமந்தா நடித்த ‘தங்கமகன்’ கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனுஷூடன் மீண்டும் இரண்டு படங்களில் சமந்தா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘வடசென்னை’ படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அதே நேரத்தில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை எனினும் படக்குழுவினர் இந்த தகவலை உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் தனுஷூடன் மூன்று முறை ஜோடி சேர்ந்துள்ள சமந்தா, இயக்குனர் விக்ரம்குமாருடனும் மூன்றாவது முறையாக இணையவுள்ளார். ஏற்கனவே ‘மனம்’, மற்றும் ’24’ ஆகிய படங்களில் விக்ரம்குமாரின் இயக்கத்தில் நடித்துள்ள சமந்தா, விக்ரம்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

English Summary: Samantha Joins with Dhanush and Vikram Kumar for the third time

samanthasamantha_new_spicy_saree_samantha_zcsamanthasamanthasamantha1

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *