shadow

dhanush and samanthaஇந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவினர்களின் அடுத்த படம் தயாராக இருக்கின்றது.

வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சமந்தாவும் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply