shadow

சல்யூட் யுவா இந்தியா !

 

பழங்குடி இனத்தைச் சேர்ந்த 18 சுட்டிகள்  சேர்ந்து தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார்கள்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 14 வயதினருக்கு உட்பட்ட கால்பந்துப் போட்டியில், ஜார்கண்ட் மாநிலத்தின் ‘யுவா இந்தியா’ என்னும் இந்த சுட்டிப் பெண்கள் பட்டாளம் பங்கேற்றது. 36 சர்வதேச அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலம் வென்றிருக்கிறார்கள்.

ஃப்ரான்ஸ் காஸ்லர் (Franz Gastler) என்ற 30 வயது அமெரிக்க இளைஞர் ஆரம்பித்ததுதான் இந்த யுவா இந்தியா அமைப்பு. அமெரிக்காவின் மின்னசோட்டா (cc) மாகாணத்தைச் சேர்ந்தவர் இவர். தற்காப்புக்கலைகள் மற்றும் கால்பந்து விளையாட்டில் மிகத் தேர்ந்தவர். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பில் ஆலோசகராகப் பணியாற்றிய இவர், சமூக ஆர்வலராக 2008-ல் இந்தியாவுக்கு வந்தார்.

ஜார்கண்ட் மாநிலத்துக்கு வந்தவர், பின்தங்கிய கிராம மக்களை மேம்படுத்த எண்ணம் கொண்டார்.  மண் குடிசையில் தங்கிக்கொண்டு, கிராமப்புறப் பள்ளிகளுக்குப் பயணம் செய்து, ஆங்கிலம் கற்பித்தார்.குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். கால்பந்து விளையாட்டுக்காக, குழந்தைகளைச் சேர்த்தபோது, ஆரம்பத்தில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை. சின்னச்சின்ன போட்டிகள் நடத்தி, பரிசுகள் கொடுத்து ஊக்குவித்ததும், பெற்றோர்கள் மனம் மாறி ஆர்வம்கொண்டனர். இப்போது, 650 பெண்கள் கால்பந்துப் பயிற்சியில் இருக்கின்றனர்.

 

ch30c

இந்த அற்புத மனிதர் உருவாக்கிய 14 வயதுக்கு உட்பட்ட யுவா அணிதான் ஸ்பெயினுக்குச் சென்றது. அரசு முறையான நிதி உதவி அளிக்கவில்லை. கேஸ்ட்லரின் நண்பர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் நிதி திரட்டினார்கள். ஸ்பெயினுக்குச் செல்ல, பாஸ்போர்ட் வாங்கக்கூட போராட்டம். பழங்குடியினக் குழந்தைகள் என்பதால், முறையான சான்றிதழ்கள் இல்லை.

காவல்துறை அதிகாரி ஒருவரின் துணையால்,  சான்றிதழ்களைப் பெற்றார்கள். இந்தப் பழங்குடியினப் பெண்கள்தான் மூன்றாம் பரிசைத் தட்டி வந்திருக்கிறார்கள். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றதில், யுவா இந்தியாவைச் சேர்ந்த புஷ்பா, முக்கியக் காரணமாக இருந்தார். நீதா குமாரியும் மனிஷா திர்க்கியும், இலங்கையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று பெருமை சேர்த்தனர்.

 

ch30a

ஆனால், இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் பிரபுல்ல படேல், ‘ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற போட்டி அல்ல’ என்று சொல்லி இருந்தாலும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு மனுவை அனுப்பியது யுவா அமைப்பு.  மத்திய அரசு, இவர்கள் வெற்றியைப் பரிசீலனை செய்து, ராஞ்சியைச் சுற்றி மூன்று இடங்களில் விளையாட களம் அமைத்துக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறது.

ch30b

 

‘யுவா இந்தியச் சுட்டிகளைப் போல நாடெங்கிலும் உள்ள திறமையான குழந்தைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தால், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டில் இந்தியாவும் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும்.

Leave a Reply