வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். நேற்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிசை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து சம்பூர் 500 மெகாவாட் மின்திட்டம், மும்மொழி திட்டம் ஆகியவை தொடர்பாக அதிபர் செயலகத்தில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதை தொடர்ந்து தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கையில் தமிழர் பகுதியில் அதிகாரப்பகிர்வு, இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவுபடுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது சல்மான் குர்ஷித் கூறியதாவது:
மேலும், இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் உட்பட அனைத்து குடிமக்களும் சமத்துவம், நீதி, சுயமரியாதை உள்ளிட்டவற்றை பெற முடியும். இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தல் மூலம் அங்கு அமைதி நிலை வந்துள்ளது.

உணர்வுப்பூர்வமான இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து பெரிசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இப்பிரச்னையில் சமரச பாதையில் முன்னோக்கி நடைபோடுவதற்கான ஒரு தீர்வை கண்டறிந்துள்ளோம். விரைவில் இதுதொடர்பாக இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுடன் சேர்ந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.
சல்மான் குர்ஷித் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேச உள்ளார்.

Leave a Reply