shadow

salmankhanபாவுவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்  கடந்த 2002ஆம் ஆண்டு மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என மும்பை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளதால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ள சல்மான்கானுக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நேரில் பார்த்த சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து சல்மான்கான் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்பது  நிரூபணம் ஆகியுள்ளதாக மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று காலை இவ்வழக்கில் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ தேஷ்பாண்டே தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தீர்ப்பின்போது சல்மான்கானை பார்த்து கூறியதாவது: “உங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகிவிட்டது. சம்பவத்தன்று நீங்கள் மது அருந்தியிருந்தீர்கள். அன்றைய தினம் நீங்களே காரை ஓட்டியிருக்கிறீர்கள். மேலும் லைசன்ஸ் இல்லாமலும் காரை ஓட்டியிருக்கிறீர்கள். இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. சல்மான்கானை நம்பி பாலிவுட் திரையுலகம் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. தற்போது தீர்ப்பு சல்மான்கானுக்கு பாதகமாக வந்துள்ளதால் பாலிவுட் திரையுலகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply