சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்த சேலம் கலெக்டர் ரோஹினி

rohini collectorசேலம் கலெக்டர் ரோஹினி எளிதில் அனைவரும் அணுகும் வகையில் இருப்பதாக ஏற்கனவே நல்ல பெயர் வாங்கியுள்ள நிலையில் நேற்று தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கிய ஒரு நபரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப செய்த உதவி குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது

நேற்று காலை வழக்கம் போல் கலெக்டர் ரோஹினி தனது வீட்டில் இருந்து அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது காந்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததை பார்த்தார். உடனடியாக காரை விட்டு இறங்கிய கலெக்டர் ரோஹினி, காவல்துறை அதிகாரிகளுக்கு விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மீட்குமாறு உத்தரவிட்டார்

இதனால் உடனடியாக விபத்துக்குள்ளான நபர் அந்த வழியாக சென்ற காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியையும் உடனடியாக சரிசெய்ய சேலம் கலெக்டர் ரோஹினி உத்தரவிட்டார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *