shadow

விசுவாசம் படத்தில் இணைந்த ரஜினியின் மருமகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர், நடிகையருக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஒருசிலர் நட்சத்திரங்களுக்கு சிறிய கேரக்டர் என்றாலும் அந்த கேரக்டருக்கும் அழுத்தமான காட்சிகள் இருக்கும்.

அந்த வகையில் ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகள் என்ற சின்ன கேரக்டரில் நடித்தவர் சாக்சி அகர்வால். இவர் தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ‘காலா’ போன்று இல்லாமல் படத்தின் திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டர் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித், நயன்தாரா, யோகிபாபு, போஸ்வெங்கட், தம்பி ராமையா, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Leave a Reply