எம்.பி.பி.எஸ் பட்டத்தை என் பெயருக்கு பின்னால் ஏன் சேர்த்து கொள்ளவில்லை தெரியுமா? சாய்பல்லவி

பிரேமம் படத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கும் நடிகை சாய்பல்லவி ஜார்ஜியால் டாக்டருக்கு படித்தவர். ஆனால் நடிப்பில் இருந்த ஆர்வதால் டாக்டர் தொழிலை விட்டுவிட்டதாகவும், ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சாய்பல்லவி கூறியுள்ளார்.

மேலும் எனது பெயருக்கு பின்னால் கூட எம்.பி.பி.எஸ் பட்டத்தை சேர்த்துக்கொள்ளவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடவுள் அருள் இல்லாமல் இந்த இடத்துக்கு வந்து இருக்க முடியாது. எனக்கு பிடித்த நடிகர் சூர்யா. அவருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றும் சாய்பல்லவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தற்போது சாய்பல்லவி, தனுஷின் ‘மாரி 2, சூர்யாவின் ‘NGK’ , மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் மற்றும் ஒரு தெலுங்கு படம் என பிசியாக உள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *