shadow

boatடெல்லி- ஆக்ரா நகரங்களுக்கு இடையேயுள்ள யமுனை நதியில் படகு போக்குவரத்து விரைவில் ஆரம்பமாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்துப் பேசிய நிதின் கட்கரி, “சீனாவில் உள்ள மொத்தப்  போக்குவரத்தில் 20 சதவீதம் நீர்வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 0.5 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர்வழி போக்குவரத்து உள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் சாலைகளில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு யமுனை நதியில் படகுப் போக்குவரத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்” என்று கூறினார்.

மேலும் கட்கரி பேசுகையில், “இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து விட்டார் என்றும். இன்னும் 10 நாட்களில் ஆரம்பகட்ட பணிகள் டெல்லி மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து தொடங்கப்படும்”  என்றும் தெரிவித்தார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் தாஜ்மஹால் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இனி படகின் மூலமே செல்லலாம்.

Leave a Reply