shadow

sail

இந்திய ஸ்டீல் ஆணையத்தின்கீழ் (Steel Authority of India) கர்நாடகா மாநிலம் பத்ராவதியில் செயல்பட்டு வரும் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்ட்ர் கம் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 2/2014-15

பணி: Operator Cum Technician Trainees

காலியிடங்கள்: 18

பிரிவுவாரியான காலியிடங்கள்:

மெட்டலர்ஜி – 06

மெக்கானிக்கல் – 06

எலக்ட்ரிக்கல் க்ஷ எலக்ட்ரானிக்ஸ் – 04

சிவில் – 02

சம்பளம்: மாதம் ரூ.16,800 – 24,110

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 28க்குள்ளிருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை Debit Card, Credit Card, Internet Banking போன்ற ஏதாவதொரு முறையில் ஆன்லைனில் செலுத்தலாம். அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம். விவரங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்கள் இணையதளத்தின் Career with SAIL பகுதியை கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை அறிந்த பின்பு தெளிவாக நிரப்பவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2015

மேலும் வயதுவரம்பு சலுகை, உடற் தகுதிகள், எழுத்துத் தேர்வு பாடத்திட்டங்கள் விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply