shadow

06_05_14_00_57_47_AM6y0iqgordyg7jkg1.D.0.Sai-baba-.

நில்! பொறுத்திரு!:

அன்று துவாரகாமாவில் (மசூதியில்) அமர்ந்து அனைவரும் உணவு உட்கொண்டிருந்த நேரம். ஏதோ அசைவது போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது. உடனே பாபா நில் பொறுத்திரு என்று கூறினார். ஏன் அவ்வாறு உரைத்தார் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

உணவு முடிந்த பிறகு அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்திய பிறகு ம்… ம்.. நடக்கட்டும் உங்கள் பணி என்று கூரை நோக்கி கூறினார் பாபா. சிறிது தூரத்தில் அவர் நின்ற காரணத்தினால் யாரும் முன் செல்லவில்லை. மசூதியிலிருந்த ஓடுகளும், மரங்களும், கல்லும் மண்ணும் என்று அனைத்தும் சிதறி விழுந்தன. அவர் சொல்லுக்கு என்ன சக்தி என்பதை அன்று கண்டறிந்தவர்கள் பாக்கியசாலிகள் அல்லவா?

இரண்டு ஆடுகள் :

ஒரு நாள் சாயிபாபா லெண்யிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மனிதன் ஒரு ஆட்டு மந்தையை ஓட்டிப் போவதைக் கண்டார். அங்கு இருந்த ஆடுகளில் இரண்டு மட்டுமே அவர் கவனத்தை கவர, சாயிபாபா அவற்றை எடுத்துக் கொஞ்சி விட்டு அவற்றை 32 ரூபாய் அளித்து பெற்றுக்கொண்டார்.

அந்த இரண்டு ஆடுகளின் விலை அன்றைய நிலைக்கு ரூபாய் நான்கு முதல் எட்டு வரையில் இருக்கும். ஆனால் சாயிபாபா இவற்றிற்கு 32 ரூபாய் அளித்துப் பெற்றுக் கொண்டதைப் பார்த்து பக்தர்கள் வியப்புற்றார்கள். பாபா ஆட்டு வியாபாரியிடம் ஏமாந்தார் என்றும் கருதினார்கள்.

சாமாவும், பய்யாகோடேயும் இதைப் பற்றிய விளக்கம் கேட்டார்கள். பாபா தம் சொந்த செலவில் அந்த ஆடுகளுக்கு இலைகளையும், தழைகளையும், பருப்புகளையும் பெற்று கொடுக்கும்படி கூறினார். பிறகு அந்த ஆடுகளின் முன் ஜென்ம கதையை அவர் கூறத் தொடங்கினார். இவர்கள் என் நண்பர்கள்.

இருவருமே உடன் பிறந்தவர்கள் பெரியவன் சோம்பேறி, சிறியவன் உழைப்பாளி உழைப்பால் உயர்ந்தான். இதை அறிந்த அண்ணன் பொறாமையால் தம்பி என்றும் பாராமல் அவனைக் கொல்ல நினைத்து ஆட்களை விடுத்தான். இதனை அறிந்த தம்பியும் அவனைப் பகையாளியாக நினைத்தான். ஆகவே இருவரும் பகைவர்கள் ஆனார்கள்.

ஒருநாள் அண்ணன் தடியைக் கொண்டு தம்பியை தலையில் பலமாக அடிக்கவும், அதே நேரத்தில் தம்பி தன்னிடமிருந்த கோடாரியால் அண்ணன் கழுத்தில் வெட்ட இருவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தனர். அவர்கள்தான் இப்பொழுது வெள்ளாடுகளாகப் பிறந்துள்ளனர்.

அவர்களை நான் அறிந்தேன். அவர்கள் என்னை அறிய முடியாது அல்லவா? விலைக்கு வாங்கிய காரணத்தினால் அந்த ஆடுகள் முக்தியை அடையும் என்று கூறி அவற்றை திரும்பவும் வியாபாரியிடமே அனுப்பி விட்டார் சாயிபாபா.

ஜீவ சமாதிகள் :

சீரடி தலத்துக்குள் பாபாவுக்கு மட்டுமல்ல அவரது முதன்மை பக்தர்களாக திகழ்ந்த 4 பேரின் ஜீவ சமாதிகளும் அமைந்துள்ளன. பாபாவிடம் மிகவும் பிரியமாக இருந்தவர்களில் தாத்யா படேலும் ஒருவர். பாபாவின் தெய்வீக செயல்களை இந்த உலக மக்கள் பார்த்து பலன்பெற வைத்தவர்களில் இவரும் ஒருவராவார். இவரது ஜீவ சமாதி உள்ளது.

அருகில் பாவு மகராஜ் கும்பா என்பவரின் ஜீவ சமாதி உள்ளது. இவர் பாபா எங்கு சென்றாலும், அந்த இடத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பணி செய்தவராவார். பாபாவின் பக்தர்களில் சற்று வித்தியாசமானவர் நானாவால். அவருக்கும் அங்கு ஜீவ சமாதி இருக்கிறது.

பாபாவிடம் அன்பு கொண்டிருந்த சீரடிவாழ் மக்களில் அப்துல் பாபாவும் ஒருவர். சாவடிக்கு எதிரில் அப்துல் பாபா வீடு உள்ளது. சாய்பாபாவை அல்லாவின் மறு உருவமாக நினைத்து அப்துல் பாபா வழிபட்டு வந்தார். அவரது சமாதியும் உள்ளே இருக்கிறது.

பச்சை சால்வை போர்த்தப்பட்ட அப்துல்பாபா சமாதியை சுற்றி வந்து பக்தர்கள் வணங்கி செல்வதை காணலாம். இந்த வரிசையில் ஷியாம் சுந்தர் குதிரையின் சமாதியும் உள்ளது. புனாவைச் சேர்ந்த நானாசாகிப் என்பவர் பாபாவுக்கு இந்த குதிரையை அன்பளிப்பாக கொடுத்திருந்தார்.

துவாரகமாயில் தினசரி வழிபாடு முடிந்ததும், பாபா முதலில் இந்த குதிரைக்குத்தான் உதியை பூசி விடுவார். பாபாவின் செல்லமாக திகழ்ந்ததால் மகான்களின் சமாதி வரிசையில், இந்த குதிரையும் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply