tamil-movies-sagaptham-movie-launch-photos08விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘சகாப்தம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனராக இருந்த சந்தோஷ்குமார் ராஜன் திடீரென படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

வல்லரசு படத்தின் உதவியாளராக இருந்த சந்தோஷ்குமார், ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை வேலை பார்க்க விடாமல் விஜயகாந்த் தலையிட்டதால் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் படத்தை இயக்குவதே விஜயகாந்த் என்பதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்ட சந்தோஷ்குமார், படத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிட்டார்.

தற்போது அவருக்கு பதிலாக சுரேந்தர் என்பவரை இயக்குனராக விஜயகாந்த் நியமித்துள்ளார். ஆனால் இவரும் கூடியவிரைவில் ஓடிப்போகும் மனநிலையில்தான் இருக்கின்றார் என கூறப்படுகிறது. படத்தின் கதை,திரைக்கதையில் இருந்து ஒவ்வொரு காட்சியும் எப்படி வரவேண்டும் என்பது வரை எல்லாவற்றிலும் விஜயகாந்த் தலையீடு இருப்பதால் வேறு எந்த இயக்குனரும் இந்த படத்தில் பணிபுரிவது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் மட்டுமின்றி மற்ற டெக்னீஷியன்களின் பணியிலும் விஜயகாந்த் தலையீடு அதிகமாக இருப்பதால் படக்குழுவினர் அனைவரும் செம கடுப்பில் இருக்கின்றனர். ஒருகட்டத்தில் அனைவருமே படத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *