சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதே போல் ஹாக்கி மீது தீராக்காதல் வைத்திருந்த தயான்சந்திற்கும் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்து வருகின்றன.

கடந்த 1905-ம் ஆண்டு பிறந்த தயான் சந்தர் 1979-ம் ஆண்டு மறைந்தார். ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய அவர் சிறு வயது முதல் ஹாக்கியின் மீது தீராத காதல் கொண்டிருந்தார். பின்னாளில் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்று கேப்டனாக பொறுப்பேற்றார்.
1928, 1932, மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக இருந்தவர் தயான் சந்த் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதம அமைச்சர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து பிரிந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஏன் பாரத ரத்னா சச்சினுக்கு வழங்கப்படுகிறது. அவர் என்ன நாட்டுக்காக இலவசமாக கிரிக்கெட் விளையாட வில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த திவாரி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சிவானந்த திவாரி பேசுகையில்…

ஹாக்கியில் சிறந்து விளங்கிய தயான் சந்திற்கு விருது வழங்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்புள்ளார். சச்சின் ஒரு நல்ல விளையாட்டு வீரர். அவர் நன்றாக விளையாட அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவர் ஒன்றும் இலவசமாக விளையாடவில்லை. சுதந்திரம் அடையாத போது இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை வாங்கி தந்தவர் ஹாக்கி வீரர் தயான் சந்த். ஆனால் அவருக்கு இந்த விருது வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *