ரஜினி, ரஹ்மான் குறித்து ‘பாகுபலி’ இயக்குனர் கூறியது என்ன?
rajamouli
‘பாகுபலி’ என்ற ஒரே படத்தின் மூலம் இந்திய சினிமாவை மட்டுமின்றி உலக சினிமா கலைஞர்களை தன்பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. தற்போது ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் ரஜினி, ரஹ்மான் குறித்து தனது கருத்தை ராஜமவுலி பதிவு செய்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவர் கூறியபோது, “ரஜினி படத்தை நான் இயக்கும் நிலை வந்தால், அந்த படத்தில் இடம்பெறும் வசனத்தை பத்து நாட்களுக்கு யாரும் கேட்கமுடியாது. அந்த அளவுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கும்’ என்று கூறினார்.

ரஹ்மான் குறித்து அவர் கூறியபோது, ‘பொதுவாக ரஹ்மான் இரவு நேரத்தில்தான் பணிபுரிவார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அது நான் தூங்கும் நேரம். அதனால் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு இருக்காது என்றே தோன்றுகிறது’ என்று கூறினார்.

மேலும் பாகுபலி 2′ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், 2017ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary: S.S.Rajamouli speech about Rajini and Rahman

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *