shadow

உலகின் மிகப்பெரிய விவாகரத்து. $7 பில்லியன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்த ரஷ்ய தொழிலதிபர்

divorceரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விவாகரத்து செய்த தனது மனைவிக்கு ஜீவனாம்சம் செட்டில்மெண்டாக $7 பில்லியன் தர சம்மதித்துள்ளார். உலக வரலாற்றில் விவாகரத்து செய்யும் மனைவிக்கு கணவர் ஒருவர் கொடுக்கும் மிகப்பெரிய தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் பிரபல தொழிலதிபர் மற்றும் முன்னாள் அமைச்சர் விளாடிமிர் பொடானின் என்பவர் தன்னுடன் 30 வருடங்கள் இணைந்த வாழ்ந்த மனைவியை திடீரென பிரிய முடிவு செய்தார். எனவே அவரிடம் இருந்து விவாகரத்து பெறவிரும்பிய அவர் ஜீவனாம்ச தொகையாக மாதம் $200,000 தர ஒப்புக்கொள்வதாக கூறினார். ஆனால் அவருடைய மனைவி ரஷ்ய சட்டவிதிகளின்படி தனக்கு ஒரே செட்டில்மெண்ட் தொகையாக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை அடுத்து விளாடிமிர் பொடானின் தனது மனைவிக்கு 7 பில்லியன் டாலர் தர ஒப்புக்கொண்டார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் பிரெஞ்ச் தொழிலதிபர் Alec Nathan Wildenstein  என்பவர் $2.5 பில்லியன் ஜீவனாம்சம் கொடுத்ததே உலகில் இதுவரை பெரிய தொகையாக இருந்தது. ஆனால் அந்த தொகையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக விளாடிமிர் பொடானின் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply