கார் வெடிகுண்டு வெடித்து கணவருடன் பலியான ரஷ்ய பெண் எம்.பி.

russiaரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷியா கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவர் கார் வெடிகுண்டு சம்பவத்தில் கணவருடன் பரிதாபமாக பலியானார். இதனால் ரஷ்யாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 30 வயதான பெண் எம்.பி. ஓகாசனா போப்ரோவ்ஸ் கயா என்பவர் தனது கணவர் நிகிதாவுடன் நேற்று நொவோ சிர்ஸ்க் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் குண்டு வெடித்ததாகவும், இதன் காரணமாக இருவருமே சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இருவரது உடல்களும் காரில் நிர்வாணமாக இருந்ததாகவும், எனவே தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்தபோது உடலுறவில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எம்பியின் கணவரே காரணம் என்றும், குடும்பச்சண்டை காரணமாக நிகிதா தனது மனைவியை வெடிகுண்டு காண்பித்து மிரட்டியதாகவும், அந்த சமயத்தில் உண்மையிலேயே குண்டு வெடித்ததால் இருவரும் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *