shadow

truck 2 மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையை கொண்டு சென்ற டிரக்கை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் அதை கைதட்டி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொண்டாடியதாகவும் உக்ரைன் அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
truck 1
ரஷ்யாவின் கிழக்கு பகுதியான டோரஸ் என்ற பகுதியில் இருந்த டிரக் ஒன்றில் இருந்துதான் ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும், அந்த ஏவுகணையை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்களின் தொலைபேசிகளை இடைமறித்து உக்ரைன் உளவுத்துறை கேட்டதாகவும், அதில் விமானம் வெடித்து சிதறியவுடன் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைதட்டி உற்சாகத்துடன் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தை உக்ரைன் உளவுப்படை ஒலிப்பதிவு செய்திருந்தது. அந்த ஒலிநாடாவை உக்ரைன் அரசு இன்று காலை வெளியிட்டுள்ளதால் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்பது உறுதியாகியுள்ளது.
truck 3
ரஷ்யாவின் தயாரான “புக்” என்ற வகை ஏவுகணைதான் விமான தாக்குதலுக்கு காரணம் என்றும், இதுபோன்ற இன்னும் பயங்கரமான ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் ரஷ்யா, கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply