ரஷ்ய பயணிகள் விமானம் விபத்து: 71 பேர் பரிதாப பலி

ரஷ்ய நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று 71 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக பலியாகினர்

ரஷ்யாவை சேர்ந்த பிரபல விமான சேவை நிறுவனமான ”சரடோவ் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆன்டோனோவ் ஏஎன்-148. இந்த விமானம் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அரசாக் என்ற நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் திடீரென விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டை இழந்து ஆர்குனாவோ என்ற கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது.

இதுகுறித்த தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விமானம் சுக்குநூறாக நொறுங்கியிருந்ததையும் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருப்பதையும் பார்த்து மீட்புக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் கருப்புப்பெட்டியை தேடும் பணி நடந்து வருவதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *