shadow

ஒரே ஒரு ஒயின் பாட்டிலுக்காக ராணுவ டேங்கரை திருடிய குடிகாரர்

ரஷ்யாவை சேர்ந்த ஒரு குடிகாரர் குடிப்பதற்கு ஒரே ஒரு ஒயின் பாட்டிலை திருடுவதற்காக ராணுவ டேங்கரை திருடி அதன் மூலம் சூப்பர் மார்க்கெட்டை இடித்துள்ளார்.

ரஷ்யாவில் தற்போது கடுமையான பனி பொழிந்து வருகிறது. எனவே பாதையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்ற ராணுவ டாங்கர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இரவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாங்கரை திருடிய ஒரு குடிகாரர் அருகில் இருந்து சூப்பர் மார்க்கெட்டை இடித்து பின்னர் அதனுள் நுழைந்து ஒரே ஒரு ஒயின் பாட்டிலை திருடிவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியின் அடிப்படையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply