shadow

துருக்கி விமானத்தை தகர்க்க தயார் நிலையில் ரஷ்ய ஏவுகணை? பழிக்கு பழியா?

russiaகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கியை பழிக்கு பழிவாங்க, துருக்கி விமானத்தை சுட்டு தள்ள ரஷ்யாவில் வியூகம் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையே போர் மூளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் பல்வேறு புதிய வியூகங்களை ரஷ்யா வகுத்துள்ள ரஷ்யா, மத்திய தரைகடலில் நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணை தாங்கி போர்க்கப்பலான மோஸ்வா  தற்போது சிரியாவின் லடாகியா கடற்பகுதியில் முகாமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ரஷ்யாவின் அதிநவீன எஸ்.400 ஏவுகணை சிரியாவில் இருந்து துருக்கி எல்லையில் சுமார் 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள லடாகியா விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தொடர்ந்து வான்பரப்பை கண்காணித்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணை எந்நேரமும் துருக்கியின் போர் விமானத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரஷ்ய ராணுவத்தின் மூத்த தளபதி லெப்டினென்ட் ஜெனரல் செர்ஜி ரூட்காய் தலைநகர் மாஸ்கோவில் இன்று பேட்டியளித்தபோது, துருக்கியுடனான ராணுவ உறவு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது இனிமேல் சிரியாவில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர் விமானங்களுக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அந்த இலக்கு தகர்க்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜெர்மானிய பாதுகாப்பு நிபுணர்கள் கூறியிருப்பதாவது: துருக்கி எல்லையில் வாழும் குர்துகள் தனி நாடு கோரி போராடி வருகின்றனர். அந்தப் பகுதியில் துருக்கி போர் விமானங்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்போது சிரியா வான் எல்லைக்குள் துருக்கி போர் விமானங்கள் நுழைவது வழக்கம். இனிமேல் துருக்கி விமானம் சிரியா எல்லையில் பறந்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது உறுதி’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் ரஷ்யா-துருக்கி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply