shadow

இந்தியாவின் துல்லியமான தாக்குதலுக்கு ரஷ்யா பாராட்டு

1உரி தாக்குதலுக்கு பதிலடியாக சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து அங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடத்திய அதிரடியான துல்லிய திடீர் தாக்குதலை வரவேற்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸ்சாண்டர் எஸ்.கடாகின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா எப்போதும் ஆதரவாக இருக்கும். தீவிரவாத செயல்கள் என்பவை மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி நாட்டின் குடிமக்களின் அமைதியை சிதைக்கும் வலிமை மிக்கவை. ஆகவே ஒவ்வொரு நட்டுக்கும் தங்கள் தற்காப்பை உறுதி செய்து கொள்ள உரிமை உண்டு. மேலும் ரஷ்யா – பாகிஸ்தான் ராணுவ படைகள் இணைந்து நடத்தும் ராணுவம் பயிற்சிகள் குறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply