சவுதி அரேபியாவை ஒரு கோல் கூட போட விடாத ரஷ்யா

உலகக்கோப்பை காலபந்து போட்டி நேற்று ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதின. இந்த போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டி தொடங்கிய 12-வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ ஒரு கோலும், 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் ஒரு கோலும் அடித்ததால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இதனையடுத்து இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா ஒரு கோலும், அதனையடுத்து டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலையும் அடித்தார். அதன்பின் ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *