shadow

freedom

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின் ‘ரிங்கிங் பெல்ஸ்’  எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு வருகிற 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

‘ஃப்ரீடம் 251’ என்ற பெயரில் விற்பனை  செய்யப்படும் இந்த போனை www.freedom251.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

‘ஃப்ரீடம் 251’ போனின் சிறப்பு அம்சங்கள்

4 இஞ்ச் எச்.டி ‘டிஸ்பிளே’

1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவார்ட்-கோர் பிராசஸர்

ஆன்ட்ராய்டு 5.1 லாலிபப் இயங்குதளம்

1 ஜி.பி ராம் மற்றும் 8 ஜி.பி. சேமிப்பு திறன் மற்றும் 32 ஜி.பி மைக்ரோ எஸ்.டி கார்டு உபயோகிக்கலாம்.

3.2 MP பின்பக்க கேமிரா மற்றும் 0.3MP முன்பக்க கேமிரா பிளாஷ் வசதியுடன்

3ஜி சேவையை பெற உதவும்

பெண்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உபயோகமான ‘ஆப்ஸ்’கள் முன்பதிவு செய்யப்பட்டு கிடைக்கும். இதுதவிர பெரும்பாலானவர்கள் உபயோகிகும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்.

Leave a Reply