shadow

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: என்ன ஆகும் பங்குச்சந்தை

பிரதமர் மோடி பதவியேற்கும்போது உறுதியாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது பொருளாதார வல்லுனர்களை கவலையடைய செய்துள்ளது.

இந்திய பொருளாதாரம் தொடா் சரிவை சந்தித்து வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து இன்று ரூ.69ஐ தொட்டு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா் சரிவை சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான வா்த்தக போரை மேற்கொண்டுள்ளதாலும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுளுடன் மேற்கொண்டுள்ள வர்த்தகப் போர் காரணமாகவும் கடந்த சில தினங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடா் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளை அமெரிக்க மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா நேற்று அறிவுறுத்தியது. நவம்பா் மாதத்திற்குள் கச்சா எண்ணெய் கொள்முதலை முழுமையாக நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளதால் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளவர்களை கவலை அடைய செய்துள்ளது

Leave a Reply