shadow

ஏலத்திற்கு வந்ததா கே.பாலசந்தர் நிறுவனம்?

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்கள் தமிழ்த்திரையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். 100 படங்களுக்கும் மேல் திரைப்படங்களை இயக்கிய இவர், கவிதாலாயா என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்./

ரஜினியின் அண்ணாமலை, முத்து, குசேலன், கமல்ஹாசனின் உன்னால் முடியும் தம்பி, புன்னகை மன்னன் போன்ற பல வெற்றி படங்களை கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பிரபல ஊடகங்களில் கவிதாலயா நிறுவனம் ஏலத்திற்கு வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தியை கவிதாலாயா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார். வங்கியிடம் ஒரு தொகை லோன் வாங்கியது உண்மைதான் என்றும், ஒரே செட்டில்மெண்டில் கடனை முடிக்க வங்கியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஏலத்திற்கு வருவதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *