shadow

rotti

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 2 கப்

கோதுமைமாவு – 1 கப்

பால், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு உப்பு சேர்த்து கலக்கவும்.

• பின்னர் அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து கடைசியாக எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும்.

• பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.

• நான்ஸ்டிக் தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

• தேய்த்த ரொட்டியை போட்டு வேக வைக்கவும்.

• ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply