shadow

மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு ஏமாற்று வேலையா? அதிர்ச்சி தகவல்

தகவல் அறியும் ஆணையம் மூலம் மதுரை எய்ம்ஸ் அறிவிப்பு என்பதே ஒரு ஏமாற்றி அறிவிப்பு என்ற அதிர்ச்சிகர செய்தி கிடைத்துள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘இந்தியா டுடே’ பத்திரிகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் குறித்து ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பெறப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மாநிலத்திற்கு ஒரு எய்ம்ஸ் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2014-15, 2015-16, 2017-18 ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் 48 மாதங்கள் ஆகியும், எந்த மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இதுவரை நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் இல்லை

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்பிற்கு, கோடிக்கணக்கில் நிதி தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இதனால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply