shadow

கேரள முதல்வரின் தலையை கொண்டு வந்தால் ரூ.1 கோடி. ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு

கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களின் ஆட்சியே காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபாருக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று கூறியதால் மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத் என்பவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்டுத்தியுள்ளது. அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை கேரள முதல்வர் கொன்று வருகிறார். எனவே, ஒரு கொலைகார முதல்வரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். அந்தத் தொகையை எனது சொத்துகள் அனைத்தையும் விற்றாவது கொடுத்துவிடுவேன்’ என்று குந்தன் கூறியுள்ளார்.

குந்தனின் இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளதோடு இது அவரது சொந்த கருத்து என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியபோது, ‘குந்தன் சந்திராவத்தின் கருத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான முகம், பயங்கரவாதம் என்பதைக் காட்டுகிறது. குந்தன் சந்திராவத்தின் கருத்துக்குப் பிறகும் பிரதமரும், பாஜக தலைமையிலான மத்திய அரசும் மெளனம் காப்பது ஏன்? அந்த மெளனம், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுக்கும் வகையில் உள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்

Leave a Reply