shadow
பசு கோமியத்தை ஆராய்ச்சி செய்த ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு டாக்டர் பட்டம்
கோமியம் என்று கூறப்படும் பசுவின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டு என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். புதுவீட்டின் கிரகப்பிரவேசத்தின்போது கோமியம் தெளிப்பது, பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வர செய்வது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இப்படிப்பட்ட பெருமையுடய பசுக்கள் மற்றும் அதன் கோமியத்தில் இருக்கும் மருத்துவ பலன்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆராய்ச்சி ஒன்றில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வந்தார் 
இந்த ஆராய்ச்சியில், அவரது பங்களிப்பை பாராட்டும் விதமாக, அவருக்கு மகாராஷ்டிர விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்ககியுள்ளது. இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பட்நாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply