shadow

janardhan reddy

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, இரும்புச் சுரங்க ஊழலில் ரு.450 கோடி முறைகேடாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவருக்கு சொந்தமான  சுமார் ரூ. 38 கோடி சொத்துகளை டில்லி சிறப்பு நீதிமன்றம்  முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இரும்புத் தாது உள்ளிட்ட கனிமங்களை வெட்டி எடுத்து பல நாடுகளுக்கு முறைகேடான முறையில் ஏற்றுமதி செய்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவி லஷ்மி அருணா மீது அமலாக்கத் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

இது தொடர்பாக இந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுவதால் ஜனார்த்தன ரெட்டி தம்பதிகளுக்கு சொந்தமான பெங்களூரில் உள்ள சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள பங்களா, பெல்லாரியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு, வங்கிகளில் இருந்த வைப்பு நிதி மற்றும் ரொக்க இருப்பு உள்பட ரூ. 38 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து சொத்துக்களை அமலாக்க துறை உடனடியாக முடக்கியது.

Leave a Reply