shadow

துளசி இலை மருத்துவ நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

thulasiசங்ககால சித்தர்கள் வரை தற்போதைய நாட்டு மருந்து வைத்தியர்கள் வரை உபயோகப்படுத்தப்படுத்தும் மூலிகைகளில் ஒன்று துளசி. இதில் ஏராளமான மருத்துவ பலன்கள் இருக்கின்றது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், துளசி மருத்துவ குறிப்பி ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சுமார் 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து அரசு. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இயங்கி வரும் ஆசி தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஜூன் மாதம் மருத்துவ குறிப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மருத்துவர் பங்கஜ் நாராம், ”11 துளசி இலைகளும், மூன்று கருப்பு மிளகுகளும் புற்றுநோய் வருவதை தவிர்க்கும். இந்த மருந்தை நானே விற்பனை செய்து வருகிறேன். இந்த மருந்து புற்று நோயை உருவாக்கும் உயிரணுக்களை கொல்லும். புற்று நோய் மட்டுமல்லாமல் குடல் இறக்க நோயையும் இது குணப்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல், 75,000 புற்றுநோயாளிகள் என்னிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் கைவிடப்பட்ட சில நோயாளிகளையும் நான் குணப்படுத்தி இருக்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு குறித்து புகார் எழுந்தது. இதை விசாரித்த பிரிட்டன் ஒளிபரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், ”இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை. இந்த தகவலை நம்பி, இதுவரை எடுத்து வந்த மருத்துவ சிகிச்சையை பலர் ஒத்திப்போடவோ, நிறுத்தியிருக்கவோ கூடும்.

நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புத் துறை விதிகளை இந்த நிகழ்ச்சி மீறியுள்ளது” எனக் கூறி, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 25,000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.

Leave a Reply