shadow

2000 ரூபாய் நோட்டும் செல்லாது? விரைவில் வருகிறது அறிவிப்பு

கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்தது. ஆனால் சரியான முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் எதிர்பார்த்த அளவு கருப்புப்பணம் வெளியே வரவில்லை. மாறாக மீண்டும் ரூ.2000 நோட்டு வடிவில் கருப்புப்பணம் பதுங்கியது.

இதனை கணக்கில் கொண்டும், ரூ.2000 நோட்டுக்களை மாற்ற மக்கள் படும் அவஸ்தையை கணக்கில் கொண்டும் மீண்டும் புதிய வடிவில் ரூ.1000 நோட்டு வரவுள்ளதாகவும், விரைவில் அதாவது வரும் மார்ச் மாதம் முதல் ரூ.2000 நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பெயர் கூற விரும்பாத மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: ‘கறுப்புப் பணத்தைஒழிக்கவும், கள்ள நோட்டை தடுக்கவும், பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என, 2016 நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நீக்குவது குறித்து ஆராயப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய நிறம், வடிவமைப்புடன், 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். தற்போது, இதற்கான பணி நடந்து வருகிறது.

இதனால் ரூ.2000 நோட்டுக்களாக கள்ளப்பணம் பதுக்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply