shadow

sivaji statueமகாராஷ்டிரா மாநில அரசின் சார்பில் அரபிக் கடலில் வீரசிவாஜிக்கு நினைவிடம் அமைக்க மாநில அரசு ரூ.1900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதன் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

குஜராத்தில் உள்ள நர்மதா நதிக்கரையில் அமெரிக்காவில் உள்ள சுதந்திரா தேவி சிலைக்கு இணையாக சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இரும்புச்சிலை வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், அரபிக்கடலில் ரூ.1900 கோடியில் வீரசிவாஜிக்கு பெரிய நினைவிடமும், அதில் மிகப்பெரிய சிவாஜியின் சிலையும் வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக மும்பையில் உள்ள நாரிமன் முனை பகுதியில் இருந்து சுமார் 2.6 கிமீ தொலைவில் அரபி கடலில் 16 ஏக்கர் பரப்பளவில் பாறை தீவு அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் மையத்தில் 19 அடி உயரத்திற்கு வீர சிவாஜியின் சிலை அமைக்கப்படவுள்ளதாகவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்லது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணீகளுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக தேசிய பாதுகாப்பு படையினர் அடங்கிய தனி பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வரும் 2019ஆம் ஆண்டு வீரசிவாஜியின் நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டதும், தினமும் இந்த நினைவிடத்தை சுற்றிப்பார்க்க சுமார் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வரை வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply