shadow

president houseஇலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, தோல்வி செய்தி வெளிவந்தவுடன் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினார். அந்த சமயத்தில் அவர் மறந்துவிட்டுப்போன ரூ.1500 கோடியை அதிபர் மாளிகை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிபர் மாளிகை என கூறப்படும் அலரி மாளிகையில் ரகசிய அறை ஒன்று இருந்ததை கண்டுபிடித்த புதிய அதிபரின் உதவியாளர்கள், உடனடியாக அந்த அறையை திறக்கும்படி உத்தரவிட்டனர். அந்த அறையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த ரூ.1,500 கோடி பணத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றினர். இதில் இலங்கை ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பணம் அனைத்தும் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது, அதிகாரத்தை தவறாக  பயன்படுத்தி கொள்ளையடித்த பணம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இந்த பணத்தை ராஜபக்சே குடும்பத்தினர் மறந்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் அல்லது அந்த பணத்தை எடுத்துக்கொண்டு செல்ல நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராஜபக்சே மறந்துவிட்டு சென்ற பணமே இவ்வளவு என்றால், அவர்கள் எடுத்துச் சென்ற தொகை எவ்வளவு   என அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது பற்றி உரிய  விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply