சென்னையில் 10 கோடியை தாண்டியது வசூல்: இது ’தர்பார்’பொங்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் ’தர்பார்’

மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள ’தர்பார்’ படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்தனர். ஒரு சிலர் வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை தந்து, இந்த படத்தின் வசூலை குறைக்க முயற்சித்தனர்

ஆனால் அனைத்து தடைகளையும் மீறி தற்போது சென்னையில் மட்டும் ரூபாய் 10 கோடி வசூலை ’தர்பார்’ பெற்றுள்ளது சென்னையில் இதுவரை ஒரு சில படங்களை 10 கோடி வசூலை பெற்றுள்ள நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது ’தர்பார்’ படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply