shadow

modi coatகடந்த குடியரசு தினத்தன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய கோட் இதுவரை ரூ.1.41 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மொத்தம் மூன்று நாட்கள் இந்த ஏலம் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறவுள்ள நிலையில் யாருக்கு இந்த கோட் கிடைக்கும் என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.

நரேந்திர மோடியின் கோட் நேற்று ஏலம் அறிவிக்கப்பட்டவுடன் முதலில்  ராஜுபாய் அகர்வால் என்பவர் அதனை 51 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் அகர்வால் என்பவர் 1 கோடி ரூபாய்க்கும், குஜராத்தை சேர்ந்த வெளிநாட்டு இந்தியர் விரால் சவுக்சி என்பவர் 1.11 கோடி ரூபாய்க்கும் ராஜேஷ் ஜுனேஜா என்ற தொழிலதிபர் 1.21 கோடி ரூபாய்க்கும் ஏலம் கேட்டார். இத்துடன் முதல் நாள் ஏலம் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக ஏலம் நடந்தது. இரண்டாவது நாளில் ஏலம் ரூ.1.25 கோடியுடன் தொடங்கியது. முதலில் முகேஷ் படேல் என்பவர் ரூ. 1.39 கோடிக்கு கேட்டார். இதனையடுத்து கோமால்காந்த் சர்மா என்பவர் ரூ. 1.41 கோடிக்கு ஏலம் கேட்டார். அத்துடன் நேற்றைய ஏலம் முடிவடைந்துள்ளது.

இன்றும் தொடர்ந்து ஏலம் நடைபெற உள்ள நிலையில் இந்த கோட் ரூ.2 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த 3 நாட்களில் யார் அதிக விலைக்கு ஏலம் கேட்கிறார்களோ, அவர்களுக்கு மோடி அணிந்த கோட் வழங்கப்படும் என சூரத் நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏலத்திலிருந்து வசூலாகும் நிதி கங்கா நதி தூய்மை திட்டத்துக்காக தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply