shadow

பறக்கும் தட்டை படம் பிடித்த ஹாலிவுட் நடிகை

1பறக்கும் தட்டு குறித்து பல ஆண்டு காலமாக பல்வேறு வதந்திகளும் செய்திகளும் பரவி வருகிறது. உண்மையில் பறக்கும் தட்டு என்ற ஒன்று இருக்கின்றதா? அல்லது கற்பனையா? என்ற விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஹாலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட் என்பவர் நியூயார்க்கில் பறக்கும் தட்டை போட்டோ எடுத்ததாக கூறியுள்ளார்.

மாலை நேரத்தில் இயற்கை எழில் காட்சிகளை நடிகை ரோவன் படமாக்கியபோது கேமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த படத்தில் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரை வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என்றும் ஒருசிலர் இது பறக்கும் தட்டு இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகை ரோவன் பிளாசர்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள இப்படத்துக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் விருப்பமும், 1,665 பேர் கருத்தும் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டோவை சிலர் சாளரத்தின் பிம்பம் எனவும், இது பறக்கும் தட்டு இல்லை எனவும் வாதிட்டு வருகின்றனர். ஆனால் பலர் இது போன்ற பறக்கும் தட்டு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளதாகவும் மீண்டும் அந்த வாய்ப்பு இந்த போட்டோ மூலம் தங்களுக்கு கிடைத்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply