shadow

தாஜ்மஹாலை தனியார் பராமரித்தால் என்ன தவறு? மத்திய அமைச்சர் அல்போன்ஸ்

இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணியை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ள நிலையில் சமீபத்தில் தாஜ்மகாலை பராமரிப்பதில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தனது அதிருப்தியை தெரிவித்தது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ், தாஜ்மஹாலை பராமரிக்கவும், விரிவுபடுத்தி பாதுகாக்கவும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய சுற்றுலாத்துறையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.

மேலும், டெல்லியில் உள்ள செங்கோட்டையை தனியார் நிறுவனம் ஒன்றுதான் பராமரித்து வருவதாகவும், இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வருவதாகவும், அவ்வாறு இருக்கும்போது தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரின் இந்த கருத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது

Leave a Reply