என் உயிருக்கு ஆபத்து: நடிகை ரோஜாவின் திடுக் தகவல்

நடிகையும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா, தனது உயிருக்கு தெலுங்கு தேச கட்சியினர்களால் ஆபத்து என்று அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நகரியில் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறியதாவது: சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பின்னர் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டமன்றத்திலும் எனக்கு இதே தான் நடந்தது. எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.

தற்போது நடத்திருப்பதும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். நியாயத்துக் காக தொடர்ந்து போராடுவேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை கோர்ட்டில் சந்திப்பேன்.

இவ்வாறு ரோஜா கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *