ஏவிய சில நொடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட்: ஜப்பானில் பரபரப்பு

ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் ஏவிய சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்று சில நொடிகளில் தொழில்நுட்ப காரணங்களால் வெடித்து சிதறியதால் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள கொகைடோ தீவில் உள்ள தைகி சோதனை தளத்தில் இருந்து ஒரு ராக்கெட் சமீபத்தில் ஏவப்பட்டது. தீப்பிழம்பை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட் சில வினாடிகளில் வெடித்து சிதறியது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேநிறுவனம் ஒரு ராக்கெட்டும் தோல்வியில் முடிந்தது.

அப்போது ஏவப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினீயர்கள் ராக்கெட்டின் கட்டுப்பாட்டை இழந்து விட்டனர். தற்போது 2-வது தடவையாக ஏற்பட்ட தோல்வியால் இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதைப்பற்றி இந்த நிறுவனம் கவலைப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட தோல்வியை ஆய்வின் மூலம் சரி செய்து மீண்டும் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *