shadow

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அந்நாட்டு அரசுகளை ஆட்டிப்படைத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இதுவரை தங்களிடம் பிடிபடுபவர்களை கத்தியால் கழுத்தை அறுத்தும், துப்பாக்கியால் சுட்டும், கல்லால் அடித்து  கொலை செய்தும் வந்தனர். தற்போது மிகவும் வித்தியாசமாக டேங்கர் மற்றும் விமானங்களை வீழ்த்தும் ராக்கெட் மூலம் சமீபத்தில் ஒருவரை கொலை செய்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.ஐ இயக்கத்தினர் குறித்து உளவு கூறியதாக பிடிபட்ட ஒருவரை அந்த இயக்கத்தினர் முதலில் ஒரு தூணில் கட்டி வைத்தனர். பின்னர் அனைவரும் சிறிது தூரம் பின்னால் சென்று அங்கிருந்து டேங்கர்களை வீழ்த்தும் திறன் கொண்ட ஒரு ராக்கெட்டை அந்த நபர் மீது ஏவினர். பலத்த சத்தத்துடன் வெடித்த ராக்கெட் ஒருசில நொடிகளில் அந்த நபரை பிணமாக்கியது.

பின்னர் மீண்டும் திரும்பி வந்த தீவிரவாதிகள் அந்த பிணத்தின் தலைமீது மிதித்து ஆடிப்பாடியவாறு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர்களின் இந்த படுகொலைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *