shadow

ரோபோ நடத்திய நேர்முகத்தேர்வு. துபாயில் புதிய முயற்சி

இதுவரை மனிதன் செய்யும் வேலையை ரோபோ செய்து வந்த நிலையில் முதல்முறையாக மனிதர்களுக்கு ரோபோ நேர்முகத்தேர்வு நடத்தியுள்ளது. ஆம் துபாய் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் போலீஸ் ரோபோ நேர்முகத் தேர்வை நடத்தியுள்ளது.

துபாய் உலக வர்த்தக மையத்தில் நடந்த இந்த நேர்முகத் தேர்வை சயீத் அல் பர்ஹான் என்னும் பெயர் கொண்ட ரோபோ நேர்முகத் தேர்வை கனகச்சிதமாக மிகக்குறுகிய நேரத்தில் நடத்தி சாதனை புரிந்துள்ளது. நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள் பர்ஹான் முன்பு நின்று கொண்டு கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும். சரியான பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தகுதி அடிப்படையில் உடனே முடிவு தெரிவிக்கப்படும். இவ்வாறு நடந்த இந்த தேர்வில் முதல் நாளில் 23 பேர் ரோபோவால் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்ஹு துபாய் போலீஸின் ஸ்மார்ட் சேவைகளுக்கான பொது இயக்குனர் காலித் நசார் அல் ரசூகி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘முதல் முறையாக நேர்முகத் தேர்வை நடத்துவதற்கு ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நேரத்தை குறைக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், விரைவாகவும் நேர்முகத் தேர்வை நடத்தி முடித்துள்ளது.

146 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த நேர்முகத் தேர்வில் முதல் நாளில் மட்டும் அமீரகத்தைச் சேர்ந்த 23 பேர் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் துபாய் காவல்துறையில் 25 சதவீதம் ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply